திருநள்ளாறு அருகே வீட்டிலிருந்த அலமாரியை உடைத்து 35 பவுன் நகைகள் திருடிய மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே மாதூர் சாலை அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் உள்ளோர் திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தபோது அலமாரிக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் கொள்ளைப்புற கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அலமாரியில் வைத்திருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். வீட்டில் இருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காரைக்காலில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே பதிவாகியிருந்த ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.