அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண், பல் மருத்துவ முகாம்
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் பொறியியல் பட்டதாரியான விநோதினி என்பவர் முகத்தின் மீது, ஒருதலைக் காதல் தொடர்பாக கடந்த 2013 -ஆம் ஆண்டு அமில வீச்சு நடைபெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அனுதாப அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரது நினைவு நாளையொட்டி, திங்கள்கிழமை அவரது குடும்பத்தினர், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை முகாமை நடத்தினர்.
காரைக்கால் தனியார் மருத்துவ மையத்திலிருந்து கண் மற்றும் பல் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து மாணவியருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
இந்த முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் ஆகியோர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டனர். கல்லூரி முதல்வர் (பொ) கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலை முதல் மாலை வரை ஏராளமான மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள், மருத்துவக் குழுவினர், கல்லூரி நிர்வாகத்தினருக்கு விநோதினி குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...