ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆணையரிடம் அனுமதி பெற்ற பின்னரே சாலையோரத்தில் பள்ளம் தோண்டவேண்டும்: ஆட்சியர் உத்தரவு

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் அனுமதி பெற்ற பின்னரே அரசுத்துறைகளும், நிறுவனத்தினரும் சாலையோரத்தில் பள்ளம் தோண்டவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:19 pm

DIN

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் அனுமதி பெற்ற பின்னரே அரசுத்துறைகளும், நிறுவனத்தினரும் சாலையோரத்தில் பள்ளம் தோண்டவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும், சாலையை புதுப்பிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்நிலையில், சாலையில் குடிநீர் குழாய் பொருத்துதல், மின்சாரம், தொலைபேசி  கேபிள் என பல நிலைகளில் பள்ளம் தோண்டுவதும், பின்னர் மூடிய பிறகு வேறு துறையினர் தோண்டுவதுமாக இருக்கிறது. இது சாலைகள் மோசமடைய முக்கிய காரணமாக இருப்பதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விவாதிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் சன்யால், நகராட்சி ஆணையர் டி.சுதாகர் மற்றும் ஆட்சியரின் செயலர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சாலைகள் மோசமடைவதற்கு அடிக்கடி பல துறையினர் பள்ளம் தோண்டுவது முக்கிய காரணமாவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பின்னர் கூறியது : தேசிய நெடுஞ்சாலை, நகர்ப்புற சாலைகள் என அனைத்தும் அடிக்கடி வெவ்வேறு துறையினர் பள்ளம் தோண்டி பின்னர் மூடுவதால் சேதமடைகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவாதிக்கப்பட்டது.
குடிநீர் குழாய் பதிப்பு, மின்சார கேபிள், தொலைபேசி கேபிள், மின் கம்பம் நடுதல் போன்ற பணிகளுக்காகவே சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது. ஒரு துறையினர் பணி செய்ய முன்வரும்போது, பிற துறையினர் அந்த பகுதியில் தங்களது செயல்பாடுகளையும் சேர்த்து செய்துகொள்ள முடிவெடுக்கவேண்டும். ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் பணிகளை செய்துவிடவேண்டும் என துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. எந்தவொரு துறையினராக இருந்தாலும் பள்ளம் தோண்டவேண்டுமெனில் நகராட்சி ஆணையர், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் முன் அனுமதி பெறவேண்டும். இது பொதுமக்களுக்கும் பொருந்தும்.
அனுமதியின்றி சாலைகளை சேதப்படுத்தினால், பொது சொத்தை சேதப்படுத்துதல் விதியின்கீழ் உரியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.