காரைக்கால் பகுதியில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வளர்ச்சிக் குழுத் தலைவர் பி. ராஜலட்சுமணன், செயலர் டி. வின்சென்ட்ராஜ், துணைச் செயலர் பி. ராஜேந்திரன், உறுப்பினர் பெரியார் கணபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அவரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்காலில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதுமான கழிப்பறைகளின்றியும், முறையான பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. இது மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் படிப்பு முடித்தோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை காரைக்காலில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை, புதுப்பிக்கும் வகையில் போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைப்புப் பணியை மத்திய அரசு தொடங்குவதற்கான பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


