மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டி.ஆர்.பட்டினம் கடற்கரையில் தர்ப்பண பூஜை

மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில்  திரளானோர் மூதாதையர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பண பூஜை செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:22 pm

DIN

மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில்  திரளானோர் மூதாதையர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பண பூஜை செய்தனர்.
மாசி மகத்தையொட்டி காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாளில், அதிகாலையிலேயே திரளானவர்கள் கடலில் நீராடி, மூதாதையர்களுக்கு தர்ப்பண பூஜை நடத்துவது வழக்கம்.
நிகழாண்டு மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு  வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல்  ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றனர்.  அங்கு   மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்காக திருமலைராயன்பட்டினம் மற்றும் பட்டினச்சேரி பகுதியில் வாழையிலை, பழங்கள் விற்பனை மையங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டன. வெளியூர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியார், குருக்கள் வந்திருந்தனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தர்ப்பணம் கொடுக்க வந்தோர் இரு வரிசைப் படுத்தி, ஒவ்வொரு வரிசைக்கும் சுமார் 50 பேர் வீதம் அமரச்செய்து பூஜை செய்யப்பட்டது. காலை 4 மணிக்குத் தொடங்கிய தர்ப்பண பூஜை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
கடற்கரைக்கு சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர பணியாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.