காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை விழாவுக்கு புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக முதல்வருக்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை விழா ஆண்டுதோறும் மணிமண்டபத்தில் பல்வேறு இசைக் கலைஞர்களைக்கொண்டு தனியார் அமைப்பு நடத்திவந்தது. பின்னர் கோயில் நிர்வாகம் நிதியுதவி செய்தது. அம்மையார் இசை ஆராதனை விழாவை புதுச்சேரி அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காரைக்கால் அம்மையார் ஐக்கிய இசைப் பெருவிழாவை அரசு நிகழாண்டு முதல் நடத்தும் என அறிவிப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாத முற்பகுதியில் நடத்தவேண்டிய நிலையில், இதற்கான பணிகள் அரசுத் தரப்பில் மெதுவாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனாவை சந்தித்து, அரசு நிதியுதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் வரும் ஏப்.2-ஆம் தேதி இசை ஆராதனை விழா தொடங்கி 4-ஆம் தேதி வரை இசை ஆராதனை நிகழ்ச்சி நடத்தலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதனை சட்டப்பேரவை உறுப்பினர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
புதுச்சேரி அரசு இந்த நிகழ்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததாக தகவல்கள் வெளியாயின. புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். காரைக்கால் சார்பு ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) ஏ.விக்ராந்த் ராஜாவையும் பேரவை உறுப்பினர் புதன்கிழமை சந்தித்து, விழா நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து பேரவை உறுப்பினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட துறை இந்த நிகழ்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி அவருக்கு நன்றி தெரிவித்தேன். எவ்வளவு தொகை என்பதும், எத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதும் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட
அரசுத்துறை அறிவிப்பு வெளியிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

