புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு

காரைக்கால் பகுதியில் சைல்டு லைன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 3:59 am

காரைக்கால் பகுதியில் சைல்டு லைன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.
குழந்தைகள் பல்வேறு விழிப்புணர்வு அடைவதற்கேற்ப மாவட்ட அளவில் பல கிராமங்களில்,  திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி,  தொடர் நிகழ்வுகளாக நடத்தப்பட்டுவருகிறது. நிரவி தைக்கால் தெரு  பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைல்டு லைன் மூலம் நடத்தப்பட்டதன் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 காரைக்கால் சைல்டுலைன்  திட்ட ஒருங்கிணைப்பாளர் டி. விமலா  கலந்துகொண்டு சைல்டுலைன் 1098 எண் குறித்தும்,18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம் என்பதை குறிக்கும் எனவும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 மூலம் கடுமையான தண்டனை வழங்க விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.
 அதனைத் தொடர்ந்து சைல்டுலைன் அணி உறுப்பினர்  து.கணேசமூர்த்தி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 2015 சட்டப்படி குற்றம் என்பதையும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும் பேசினார். 
உறுப்பினர் து.மரியதாஸ்  குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க முடியும் என்பதை விளக்கியும் பேசினார். கு.மும்தாஜ் சட்ட உரிமைகள் குறித்துப் பேசினார்.  தைக்கால் தெரு பகுதியைச் சார்ந்த பிச்சையம்மாள் வரவேற்று பேசினார்.  சைல்டுலைன் அணி உறுப்பினர் ச.நர்மதா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.