புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை விழாவுக்கு அரசு நிதி ஒதுக்கீடு: முதல்வருடன்  எம்.எல்.ஏ. சந்திப்பு

காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை  விழாவுக்கு புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக முதல்வருக்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.

Updated On :29 மார்ச் 2018, 4:00 am

காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை  விழாவுக்கு புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக முதல்வருக்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
காரைக்கால் அம்மையார் இசை ஆராதனை விழா ஆண்டுதோறும் மணிமண்டபத்தில் பல்வேறு இசைக் கலைஞர்களைக்கொண்டு தனியார் அமைப்பு நடத்திவந்தது. பின்னர் கோயில் நிர்வாகம் நிதியுதவி செய்தது. அம்மையார் இசை ஆராதனை விழாவை புதுச்சேரி அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது.
கடந்த  பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காரைக்கால் அம்மையார் ஐக்கிய இசைப் பெருவிழாவை அரசு நிகழாண்டு முதல் நடத்தும் என அறிவிப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாத முற்பகுதியில் நடத்தவேண்டிய நிலையில், இதற்கான பணிகள் அரசுத்  தரப்பில் மெதுவாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்ட  கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனாவை சந்தித்து, அரசு நிதியுதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் வரும் ஏப்.2-ஆம் தேதி இசை ஆராதனை விழா தொடங்கி 4-ஆம் தேதி வரை இசை ஆராதனை நிகழ்ச்சி நடத்தலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதனை சட்டப்பேரவை உறுப்பினர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
புதுச்சேரி அரசு இந்த நிகழ்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததாக தகவல்கள் வெளியாயின. புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை  சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். காரைக்கால் சார்பு ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) ஏ.விக்ராந்த் ராஜாவையும் பேரவை உறுப்பினர் புதன்கிழமை சந்தித்து, விழா நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து பேரவை உறுப்பினர் கூறும்போது,  சம்பந்தப்பட்ட துறை இந்த நிகழ்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
இதையொட்டி அவருக்கு நன்றி தெரிவித்தேன். எவ்வளவு தொகை என்பதும், எத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதும் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட 
அரசுத்துறை அறிவிப்பு வெளியிடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.