புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காரைக்கால் கோயில் சுவரில் அம்மையார் வாழ்க்கை வரலாறு, பெருமாள் சயனக் கோல ஓவியம்

காரைக்கால் கைலாசநாதர் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில் சுவர்களில் அம்மையார் வாழ்க்கை வரலாறு மற்றும் ரங்கநாதர் சயனக்

Updated On :29 மார்ச் 2018, 7:47 pm

காரைக்கால் கைலாசநாதர் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில் சுவர்களில் அம்மையார் வாழ்க்கை வரலாறு மற்றும் ரங்கநாதர் சயனக் கோல ஓவியம் வரையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர், பாரதியார் சாலையோரத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் ஆகியவற்றின் வாயிலில், பெயர்ப் பலகை எல்இடி விளக்குடன் அமைக்கவும், அம்மையார் வாழ்க்கை வரலாறு குறித்த ஓவியத்தை, கோயில் மற்றும் குளத்தின் சுவரில் வரையவும் ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், நன்கொடையாளர்கள் உதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டன.  முதல்கட்டமாக  பாரதியார் சாலையை நோக்கி கைலாசநாதர் கோயில் சுவரில் ஒரு புறத்தில் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியம் வரையும் பணி தொடங்கப்பட்டு, கடந்த மாதம் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி காரைக்கால் வந்தபோது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இக்கோயிலின் 2-ஆவது புற சுவரில் அம்மையாருக்கு இறைவன் காட்சித் தருவதை தத்ரூபமாக விளக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், பாரதியார் சாலையை நோக்கி ராஜகோபுரம் கொண்டிருக்கும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் சுவரில், சயனக் கோலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் உருவமும், ரங்கநாயகித் தாயார் உருவமும், வஜ்ராங்கியில் உத்ஸவர்  நித்யகல்யாண பெருமாள் ஓவியமும் வரையப்பட்டுள்ளன. 
கைலாசநாதர் கோயில் தேரோட்ட நிகழ்வு வியாழக்கிழமை இருப்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பார்வைக்காக இந்த ஓவியங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கலந்துகொண்டு ஓவியங்களைத் திறந்துவைத்தார்.  கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வாகனப் போக்குவரத்துப் பகுதியை நோக்கிய கோயில் சுவர்கள் பாழடைந்து காணப்பட்ட நிலையில், இந்த சுவர்களில் அந்தந்த கோயில்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் வண்ண ஓவியம் வரையப்பட்டிருக்கும் காட்சி, பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.