காரைக்கால் பகுதியில் சைல்டு லைன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.
குழந்தைகள் பல்வேறு விழிப்புணர்வு அடைவதற்கேற்ப மாவட்ட அளவில் பல கிராமங்களில், திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி, தொடர் நிகழ்வுகளாக நடத்தப்பட்டுவருகிறது. நிரவி தைக்கால் தெரு பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைல்டு லைன் மூலம் நடத்தப்பட்டதன் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி. விமலா கலந்துகொண்டு சைல்டுலைன் 1098 எண் குறித்தும்,18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம் என்பதை குறிக்கும் எனவும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 மூலம் கடுமையான தண்டனை வழங்க விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து சைல்டுலைன் அணி உறுப்பினர் து.கணேசமூர்த்தி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 2015 சட்டப்படி குற்றம் என்பதையும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும் பேசினார்.
உறுப்பினர் து.மரியதாஸ் குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க முடியும் என்பதை விளக்கியும் பேசினார். கு.மும்தாஜ் சட்ட உரிமைகள் குறித்துப் பேசினார். தைக்கால் தெரு பகுதியைச் சார்ந்த பிச்சையம்மாள் வரவேற்று பேசினார். சைல்டுலைன் அணி உறுப்பினர் ச.நர்மதா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

