காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிப்புக்காக தோண்டப்படும் பள்ளத்தை, போக்குவரத்துக்கு பாதிப்பின்றி முறையாக மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறையினரை எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
காரைக்கால் நகரப் பகுதியில் சாலைக்கு கீழே பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள குடிநீர்க் குழாய்க்கு மாற்றாக, புதிதாக குழாய் பதிக்கும் பணிகளைப் பொதுப்பணித்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த பணி அனைத்து தெருக்களிலும் நடைபெற்று வருகின்றன.
குழாய் பதிப்பினால் கழிவுநீர் புகுந்துவிடுவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு உருவாவதாகவும், தொலைபேசி புதைவட கேபிள் இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடுவதாகவும், பள்ளம் முறையாக மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாகவும் பரவலாக புகார் கூறப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாங்கனித் திருவிழாவின்போது பாரதியார் சாலையில் திருவிழா கடைகள் போடப்படுவதால், ஒரு மாத காலம் போக்குவரத்து வேறு தெருக்களில் திருப்பிவிடப்படும். பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் குழாய் பதிப்புப் பணியால், சாலைகள் சீர்கேடு அடைந்துள்ளன. இவற்றால் போக்குவரத்தும் வெகுவாக ஸ்தம்பிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் லெமேர் வீதி, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட பகுதியில் குழாய் பதிப்புக்குப் பின், பள்ளம் முறையாக மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா அந்த பகுதிக்கு வியாழக்கிழமை சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பக்கிரிசாமி, இளநிலைப் பொறியாளர் கோவிந்தராஜன் ஆகியோரை அழைத்துப் பேசினார்.
இதுகுறித்து பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா கூறும்போது, நகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குழாய் பதிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளம் முறையாக மூடப்பட்டு சாலை சீரான நிலைக்கு கொண்டு வரப்படாததால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த பள்ளங்களை சரியான முறையில் மூடி, வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பின்றி இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களை கேட்டுக்கொண்டேன்என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!

சிறந்த படமாகத் தேர்வான ஆர்டிகிள் 370-க்கு 3 தேசிய விருதுகள்!

சிறந்த நடன இயக்குநர்: தமன்னாவின் பாடலுக்குக் கிடைத்த தேசிய விருது!
வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


