செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

நிரவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பருவ மழைக்காலத்தில் நோயாளிகளுக்கு திருப்தியான

Updated On :8 அக்டோபர் 2018, 7:38 am IST

நிரவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பருவ மழைக்காலத்தில் நோயாளிகளுக்கு திருப்தியான சேவை செய்யும் வகையில் இருக்கிறதா? என்பது குறித்து  சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதா ஆனந்தன், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நிரவி மற்றும் திருப்பட்டினம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி, மக்களை சந்தித்து வருகிறார். தண்ணீர் தேங்குமிடங்களைப் பார்வையிட்டு, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அவற்றை சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.
இதன் தொடர் நிகழ்வாக, நிரவியில் உள்ள அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார். உள்நோயாளிகள், புறநோயாளிகளை சந்தித்து, ஆரம்ப  சுகாதார நிலையத்தின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா? என கேட்டறிந்தார். மருத்துவர்களை சந்தித்த பேரவை உறுப்பினர், மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதா?, பருவ மழைக்காலத்தில் மக்களுக்கு வரக்கூடிய நோய்களுக்கேற்ப மருந்துகள் பற்றாக்குறையின்றி வைக்கப்பட்டிருக்கிறதா?, ஆம்புலன்ஸ் வாகன வசதிகள் போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார்.
ஊழியர்களிடம் பேசிய பேரவை உறுப்பினர், சுகாதார நிலையத்தின் உள்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.