பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும் சிறப்பங்காடியை, காரைக்காலில் கூடுதல் நாள்கள் நடத்தும் வகையில் உடனடியாக திறக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும், பாப்ஸ்கோ நிறுவனம் இணைந்து ஆண்டுதோறும் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் தீபாவளி பல்பொருள் சிறப்பங்காடியை நடத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வார காலத்துக்கு முன்பே மளிகைப் பொருள்கள், காய்கனி, பட்டாசு, இனிப்பு, துணி வகைகள், எண்ணெய், நெய் உள்ளிட்டவை கொண்ட தனித்தனி அரங்குகளுடன் இந்த அங்காடி அமைக்கப்படுவது வழக்கம். இதில் தனியார் நிறுவனத்தினரும் பங்குபெறுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு ஏறக்குறைய ரூ.1.50 கோடி விற்பனை நடைபெறும். சந்தையைக் காட்டிலும் பொருள்களின் விலையில் கணிசமாக குறைவு இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெறுகிறது. காரைக்காலில் நடத்தப்படும் அங்காடியில் பொருள்கள் சில நாள்களிலேயே விற்பனையாகிவிடுவதும், அங்காடி நிறைவு நாள் வரை பொருள்கள் முழுமையாக இல்லாத குறையும் நிலவிவருகிறது.
இதனை போக்கும் வகையில் தீபாவளிக்கு 10 நாள்கள் முன்பே அங்காடியை திறக்கவேண்டும். அனைத்துப் பொருள்களும் அங்காடியில் நிறைவு நாள் வரை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்யவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
தற்போது பாப்ஸ்கோ நிறுவனப் பணியாளர்களுக்கு சுமார் 15 மாத கால ஊதிய நிலுவை இருப்பதால், பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கான ஊதியத்தை வழங்கினால் மட்டுமே அங்காடியில் பணியாற்ற முடியும் எனக் கூறிவருகிறார்கள். எனவே, புதுச்சேரி, காரைக்காலில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி திறப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாப்ஸ்கோ அல்லாமல் தனியார் மூலம் அங்காடியை நடத்த அரசு திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், காரைக்காலில் அங்காடி திறப்புக்கான தேதி உள்ளிட்டவை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பெரும்பான்மையான மக்கள் பயன்பெறக்கூடிய அங்காடியை, காலத்தோடு திறப்பு செய்ய காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமியை ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்டு கேட்டபோது, பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பங்காடியைத் திறப்பது தொடர்பான முன்னேற்பாடுகளை அரசு செய்துவருகிறது. விரைவில் அங்காடி திறக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

