
காரைக்காலில் உடற் பயிற்சிக் கூடம் திறப்பு
காரைக்காலில் புதன்கிழமை ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய உடற் பயிற்சிக் கூடத்தை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திறந்து வைத்தார்.
காரைக்காலில் புதன்கிழமை ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய உடற் பயிற்சிக் கூடத்தை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திறந்து வைத்தார்.
காரைக்காலில் உள்விளையாட்டு அரங்கம் பயன்பாட்டில் உள்ளது. வெளி அரங்க கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. உள்அரங்கத்தில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்து போட்டிகளில் பங்குகொள்கின்றனர்.
உள்அரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு நவீன உடற்பயிற்சி சாதனங்களுடன் மையம் ஏற்படுத்தவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ரூ.10 லட்சம் செலவில் பல்வேறு உடற் பயிற்சி சாதனங்களுடன் மையம் அமைக்கப்பட்டது. இந்த உடற் பயிற்சி மையத்தை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் புதன்கிழமை திறந்து வைத்து, அரங்கத்தில் இதுபோன்ற நவீன உடற் பயிற்சிக் கூடம் பயன்பாட்டுக்கு வந்ததை மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யவும், உரிய முறையில் உடற் பயிற்சி மையத்தை பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், கல்வித் துறை துணை இயக்குநர் (பொ) கேசவ், கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளர்கள் பொன். சௌந்தரராசு, கார்த்திகேசன், உடற்கல்வி துணை இயக்குநர் எம். லெனின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்துவோர் ரூ.1,000 செலுத்தி உறுப்பினராக சேரவேண்டும். மாதம் ரூ. 400 கட்டணமாக செலுத்தவேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






