ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
தூய்மை இந்தியா குறித்து பள்ளி, கல்லூரிகளின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரும், தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் இயங்கிவரும் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் செப்.1 முதல் 15-ஆம் தேதி வரை தூய்மை இந்தியா திட்ட செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிகளில் ஒன்றாக பள்ளி மாணவர்களின் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை பள்ளி முதல்வர் சுவாமிநாதன், துணை முதல்வர் எட்வின் சாமுவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
நிரவி பிரதான சாலை, கிளாஸ் தெரு, காரைக்கால் - நாகப்பட்டினம் பிரதான சாலை வரை இப்பேரணி நடைபெற்றது. பேரணியில், வீட்டில் உள்ள குப்பைகளை சாலையோர குப்பைத் தொட்டியில் போடவேண்டும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை பயன்படுத்தவேண்டும், குடியிருப்பு அருகே சுகாதாரம் காக்கவேண்டும் ஆகிய வாசகங்களை கோஷங்களாக எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர். 
பேரணிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  நந்தினி மற்றும்  திட்ட அலுவலர் ஜெ. ஜெயப்பிரபா மற்றும் ஆசிரியர்கள் பாபு, பிரான்சிஸ் சேவியர், மெர்சி அன்னிபெசண்ட், லலிதா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.