மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

Published On :

காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்காலில் செயல்படும் காரைக்கால் அம்மையார் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் சார்பில், பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பங்களிப்புடன் நடந்த பயிற்சியை துணை வட்டாட்சியர் மணிகண்டன் நம்பூதிரி தொடங்கிவைத்தார்.
பேரிடர் என்பது திடீரென வரக்கூடியது. குறிப்பாக புயல், வெள்ளம், நிலஅதிர்வு போன்றவை பேரிடராகும். மேலும் மின்சாரம், எரிவாயு மூலம் ஏற்படும் விபத்துகளும் பேரிடரைக் குறிக்கும். எனவே எந்தவொரு பேரிடராக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறனை ஒவ்வொருவரும் பெற்றிருக்கவேண்டும்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இவ்வாறான திறனை தொடக்க நிலையிலேயே பெற்றிருக்கும் வகையிலேயே காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து இந்த பயிற்சியை அளித்து வருகிறோம். காரைக்காலில் உள்ள தீயணைப்புத் துறையினர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் பயிற்சி பெற்று வந்துள்ளனர். எனவே, தீயணைப்புத் துறையினர், இவ்வாறான சூழலில், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கும்போது மாணவர்கள் அதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அண்மையில், கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பேரிடர் மீட்புப் படையினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பதை மாணவர்கள் நினைவில்கொண்டு, அதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொழிற்சாலைகள் ஆய்வாளர் செந்தில்வேலன் கலந்துகொண்டு மாணவ, மாணவியரிடையே பேசினார். இந்த பயிற்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். தீயணைப்புத்துறையினர் பல்வேறு சாதனங்கள் மூலம் செயல்விளக்கம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.