மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாலைகள் சீரமைப்பு செய்தல், குப்பைகளுக்கான வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

Published On :

சாலைகள் சீரமைப்பு செய்தல், குப்பைகளுக்கான வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால்  புதிய பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பிரதேச செயலர் ப. மதியழகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் அ. ராமமூர்த்தி கலந்துகொண்டு பேசினார்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். குடிநீர், மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். குப்பைக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கட்சி நிர்வாகிகள் என். பிச்சையன், ஜி. கலியமூர்த்தி, ஜி. புண்ணியமூர்த்தி மற்றும் பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.