6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் நாளை குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை (செப். 14) குறைகளைக் கேட்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை (செப். 14) குறைகளைக் கேட்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதுறித்து மாவட்ட ஆட்சியர்  ஆர்.கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர்,   காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 14-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். புகார்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.