காரைக்காலில் நடைபெறும் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம. குப்புசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பை காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் :
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. காரைக்கால் பகுதியில் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபாலருக்குமான பயிற்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு -2019 எதிர்கொள்ள புதுச்சேரி கல்வித் துறையானது தற்போது சிறப்பு வசதியை செய்துள்ளது. காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள், பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கூறிய பள்ளிக்குச் சென்று தங்கள் நீட் நுழைவுத் தாளினை கொடுத்து, இந்த குறுகிய கால பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!

தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
