தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா

காரைக்காலில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 6:30 am IST

காரைக்காலில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் 26-ஆம் ஆண்டாக சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி,   உஞ்சு விருத்தி நடைபெற்றது. 9 மணியளவில் மங்கள இசை, நாகசுர நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை காரைக்காலில் உள்ள அனைத்து முன்னணி சங்கீத வித்வான்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடைபெற்றது. சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று இசைத்த கீர்த்தனையை ஏராளமான மக்கள் கேட்டு ரசித்தனர்.  தொடர்ந்து, மாலையில் பாலசந்தர் சங்கீத வித்யாலயாவின் மாணவ, மாணவியர் சார்பில் சிறப்பு இசை ஆராதனை மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்ஸவம் நடைபெற்றது. காரைக்கால் பகுதியின் பல முக்கிய பிரமுகர்களும், இசை பிரியர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
சங்கீத ஆராதனைக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் இ.சண்முகநாதன் குழுவினர் செய்திருந்தனர்.  சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசை மூலம் ஆராதனை செய்யும் விதமாகவும், இசையின் மகத்துவம் மக்களிடையே புரியும் வகையிலும், இளைஞர்களிடையே இசை ஆர்வத்தை தூண்டும் விதமாகவே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடத்தப்பட்டுவருவதாக அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.