காரைக்கால் மாவட்டத்தின் கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டம் தயாரிப்புக்காக, உள்ளாட்சி மற்றும் பல்வேறு அரசுத் துறையினருக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் 2019-20 -ஆம் ஆண்டில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தப்படுவதற்கு, உரிய திட்டமிடல் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தின் உள்ளாட்சித் துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையினருக்கான பயிற்சி வகுப்பு பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஊரக மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் கிட்டிபல்ராம் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.
காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் எஸ். பாஸ்கரன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பல்வேறு அரசுத்துறையின் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கான வட்டார ஒருங்கிணைப்பு அதிகாரிகள், ஒவ்வொரு அரசுத்துறையிலும் உள்ள நோடல் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வரும் நிதியாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் 5 கொம்யூன் பஞ்சாயத்து பகுதிக்குள் உள்ள கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களாக தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்துதல், மின்சார வசதியை மேம்படுத்துதல், சாலை, கழிவுநீர், குடிநீர் வசதி மேம்படுத்துதல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மாணவர்கள், கிராமத்தின் பெண்கள், முதியோர் என பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும், இந்த திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது, இதுதொடர்பாக செல்லிடப்பேசி செயலி உருவாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இதுகுறித்து உள்ளாட்சித் துறையினர் கூறும்போது, கிராம வளர்ச்சித் திட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் 24 பல்வேறு அரசுத்துறைகள் பங்களிப்பாளராக உள்ளன. ஒவ்வொரு துறைகளும் அதன் சார்பில் செய்யப்படும் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் பாதகை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். திட்டங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதற்கான வகையில் அனைத்துத் துறையினரும் செயல்படுவதற்கேற்ப உரிய பயிற்சி தரப்பட்டது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?

முறையான வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள்! - கருப்பு படக்குழுவுக்கு தனுஷ் ஆதரவு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
