காரைக்கால் அருகே இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புத்தொளி தன்னிறைவு சமுதாயத்தின் நிறுவனத் தலைவர் கே. உத்திராபதி அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் பகுதி வடமட்டம் சாலை, முக்கூட்டு ஆலமரம் கிராமத்தில், கிராமத்தினரிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி நடைபெற்றது.
இதற்கான பரிசளிப்பு மற்றும் மகளிர், இளைஞர்கள் உள்ளிட்டோர் கல்வி மேம்பாடு, தொழில் தொடங்குதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கிராம இளைஞர்களிடையே உறி அடித்தல், கோலப் போட்டி, சாக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலர் எஸ். எழிலரசன் தலைமை வகித்தார். மருத்துவர் தமிழ்வேலன், செயலர் கே. மணவாளன் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துகளை விளக்கிப் பேசினர். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். அமிலன் வரவேற்றார். பி. தம்பி தேவேந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


