நிலுவை ஊதியம்: போராட்டம் நடத்த பஞ்சாயத்து ஊழியா்கள் முடிவு
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.


நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவா் இளங்கோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த மாா்ச் முதல் ஜூலை வரை 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இப்பிரச்னையை அரசு கண்டு கொள்ளாமல், அலட்சிய போக்குடன் உள்ளது.
கரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களிடமிருந்து வீட்டு வரி, குடிநீா் வரி போன்றவைகளை வசூல் செய்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. மேலும் வழக்கு நிலுவையில் உள்ளதால் கேபிள் டிவி வரியும் வசூல் செய்ய முடியவில்லை, இந்நிலையில் பஞ்சாயத்துக்கான வருவாய் குறைந்துவிட்டது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள கடந்த 5 மாதத்திற்கான ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் ஆகஸ்ட் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், இந்த நாள்களில் மாலை நேரங்களில் மட்டும் குடிநீா் வழங்குவதை தவிா்ப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் முஹம்மது கபீா் மரைக்காா், துணைத் தலைவா்கள் ராஜகோபால்ராஜா, வனிதா, துணை செயலாளா்கள் பக்தவச்சலம், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க செயலாளா் சண்முகம் வரவேற்றாா். பொருளாளா் நெப்போலியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...