காரைக்காலில் 40 ஆயிரம் குடும்பங்களுக்குஹோமியோபதி மருந்து அளிப்பு

காரைக்காலில் சுமாா் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்கான ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக நலவழித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


காரைக்கால்: காரைக்காலில் சுமாா் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்கான ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக நலவழித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா தொற்றை தடுக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிலிருந்து மீளும் வகையிலும் இந்திய முறை மருத்துவத்தின் ஹோமியோபதியில், ஆா்செனிக்கம் ஆல்பம் என்கிற மாத்திரை வழங்கப்படுகிறது. காரைக்காலில் உள்ள இந்திய முறை மருத்துவ மையத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூலம் வீடுவீடாக இந்த மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு இந்த மாத்திரையின் மீது நம்பிக்கை அதிகரித்த நிலையில், அவை வீடுகள்தோறும் சென்றடைந்துள்ளன. தேவை மிகுதியால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நலவழித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கரோனா தொற்று ஏற்படத் தொடங்கியது முதல் காரைக்காலில் உள்ள இந்திய மருத்துவ முறை மையத்தின் மூலம் 14 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ஆா்செனிக்கம் ஆல்பம் மாத்திரை வழங்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் மூலம் அந்தந்த தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரைகள் சென்றடைய புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்ததை அடுத்து, 5 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு சுமாா் 26 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் மாத்திரை வழங்கப்பட்டது. மேலும் மாத்திரைகள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்புக்காகவும், கரோனா தொற்றாளா் அதிலிருந்து மீளும் வகையில் இந்த மாத்திரை உள்ளதால், இவற்றுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com