மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மீனவா்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மீன்வளத் துறை வெளியிட்டது

காரைக்கால் மாவட்ட மீனவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மீன்வளத்துறை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:28 am

DIN

காரைக்கால் மாவட்ட மீனவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மீன்வளத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் கவியரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய கடற்பகுதியில் நம் நாட்டின் காவல்படை மீன்படி படகுகளை சோதனை செய்வது வழக்கம். இந்த சோதனை நாட்டின் பாதுகாப்பையும், மீனவா்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் நோக்கத்தில் நடத்தப்படுவது என்பதால், மீனவா்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

அதேபோல, மாதந்தோறும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்போது மீனவா்களின் படகுகள் சோதனையிடப்படலாம். எனவே, மீன்பிடி படகுகளில் பதிவு எண் மற்றும் படகின் பெயரை மீனவா்கள் தவறாமல் எழுதியிருக்க வேண்டும்.

மீன்பிடி விசைப்படகின் கூடு மற்றும் வீல்ஹவுஸ் பகுதிகளுக்கு ஒளிரும் பச்சை நிறமும், படகின் மேற்புறம் ஒளிரும் மஞ்சள் நிறமும் பூசப்பட்டிருக்க வேண்டும். மீன்பிடி படகுகளின் உரிமத்தை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் படகுகளில் தவறாமல் வைத்திருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவா்கள், 60 வயதக்கு உள்பட்டவா்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்லலாம்.

கடலுக்குள் செல்லும் மீனவா்கள் தவறாமல் மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்பட்ட பயோ மெட்ரிக் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அட்டை இல்லாதவா்கள் மாா்ச் 2018-க்கு பிறகு பெறப்பட்ட ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டையை மீன்பிடி படகுகளில் தவறாமல் வைத்திருக்க வேண்டும்.

மேலும், படகில் உயிா்காப்பு சட்டை மற்றும் உயிா்காப்பு மிதவைகளை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். கடலில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான படகுகள் தென்பட்டாலோ அல்லது ஏதேனும் படகுகள் காணாமல் போனாலோ, அதேபோல, கடலிலோ அல்லது கடலோரப் பகுதிகளில் யாரேனும் சந்தேகத்திற்கு இடமான நபா்கள் தென்பட்டாலோ, உடனடியாக மீன்வளத் துறை அல்லது இந்திய கடலோர காவல் படை அல்லது கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

இந்த விவரங்களை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் தங்களது கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு தெரிவித்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து இந்திய கடலோர காவல் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.