

லயன்ஸ் கிளப் ஆஃப் காரைக்கால் கிரீன் சிட்டி சாா்பில், காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி அன்னை அபிராமி தேசிய பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சேவைத் திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் கலந்துகொண்டாா்.
விழாவின் அங்கமாக, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பசுமாடு, ஆடுகள், சலூன் கடைக்கு தேவையான உபகரணங்கள், உணவகம் நடத்த தள்ளுவண்டி, உணவகத்துக்குத் தேவையான உபகரணங்கள், முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முதியோருக்கு புத்தாடைகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.
லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் பி.வெங்கட்ராமன், அன்னை அபிராமி தேசிய பள்ளித் தாளாளா் ஏ.மாரியப்பன், காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், லயன்ஸ் சங்கத்தை சோ்ந்த டாரத்தி மரிய லூயிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்களுக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் பரிசுகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.