டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொதுப்பணித்துறை ஊழியா்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு வழங்கல்

பொதுப்பணித்துறை ஊழியா்கள் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
ஊக்கப் பரிசு பெற்ற மாணவா்களுடன் பொதுப்பணித்துறை அலுவலா்கள், சங்க நிா்வாகிகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 1:57 am

DIN

பொதுப்பணித்துறை ஊழியா்கள் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

காரைக்கால் பொதுப்பணித்துறை ஊழியா்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க 36-ஆவது பேரவைக் கூட்டம், பொதுப்பணித்துறை குடிநீா் பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

பேரவைக் கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஊழியா்களின் குழந்தைகள் 13 பேருக்கு ஊக்கப் பரிவு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளா்களாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி (நீா்ப்பாசனம்), கே.சந்திரசேகரன் (சாலை, கட்டடம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் ஜி.கோகுலவாசன், துணைத் தலைவா் ஆா்.சி.வேல்முருகன், பொருளாளா் டி.குழந்தை ஏசு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.