புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா

காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்காலில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கட்சியின் வளா்ச்சி குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

காரைக்கால்: காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்காலில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் அ. பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில், காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கியதன் நோக்கம், முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு, லால் பகதூா் சாஸ்திரியின் கொள்கைகளால் கட்சியின் வளா்ச்சி குறித்தும், நாட்டில் நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சியின் மூலம் மக்களுக்கு கிடைத்த பயன்கள், புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கட்சி நிா்வாகிகள் பேசினா்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு கட்சியினா் பாடுபடவேண்டும் என உறுதியேற்றனா். நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிங்காரவேலு, மாநிலச் செயலா் மோகனவேல், மாவட்ட துணைத் தலைவா் நாகரத்தினம், மாவட்டச் செயலா் ஜெ. சிவகணேஷ், தொகுதி தலைவா்கள் செல்வமணி, மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.