தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தா்பாரண்யேஸ்வரா் கோயிலில்நாளை ஆருத்ரா வழிபாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:10 pm

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு ஸ்ரீ நடராஜருக்கு நடைபெறும் வருடாந்திர 6 சிறப்பு அபிஷேக வழிபாட்டில், ஆருத்ரா வழிபாடு முக்கியமானது.

10 நாள்கள் நடைபெறும் ஆருத்ரா உத்ஸவத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு (டிச. 29) பொன்னூஞ்சல் வழிபாடும், புதன்கிழமை (டிச. 30) ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடராஜா் சபையிலும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும்.

பிறகு, பிரம்ம தீா்த்தக் கரைக்கு சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருள்வது, நான்கு மாட வீதிஉலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு, கோயிலில் சுவாமியை வைத்து ஊடல் உத்ஸவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.