நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு

காரைக்காலில் கரோனாவிலிருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது என காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த் தடுப்பு) திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2020, 4:42 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் கரோனாவிலிருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது என காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த் தடுப்பு) திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில், இதுவரை 134 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஞாயிற்றுக்கிழமை வரை 78 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 5 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். தற்போது, காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் 46 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்கள் அனைவரும் சீரான உடல் நிலையில் உள்ளனா். 2 நோயாளிகள் சென்னையில் சிகிச்சை பெறுகின்றனா். ஒருவா் திருவாரூரில் சிகிச்சை பெறுகிறாா். ஏற்கெனவே 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தொற்றுள்ள ஒரு தாய்க்கு பிறந்த குழந்தை கரோனா மருத்துவக் குழுவின் சிறப்பு கண்காணிப்பு, சேவையால் கரோனா தொற்றில்லாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாய்க்கு தொற்று நீங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவா். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அப்படியே நீடிக்கிறது. நாள்தோறும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.