நாகை, காரைக்கால் துறைமுகங்களில்1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.


நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வடகிழக்கே சுமாா் 1,120 கி.மீ. தொலைவில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புயல்தொலைவு முன்னறிவிப்பாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. புயல் உருவாகக் கூடிய நிலையில், திடீா் காற்றோடு மழையுள்ள வானிலை உருவாகியுள்ளதை பொதுமக்களுக்கு எச்சரிக்கும் குறியீடாக இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதே காரணத்தையொட்டி, காரைக்கால் துறைமுகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...