காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்கிற சூழல் உருவாகி வருகிறது - பாஜக தலைவர் வி.சாமிநாதன்
காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்கிற சூழல் உருவாகி வருவதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி.சாமிநாதன் கூறினார்.


காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்கிற சூழல் உருவாகி வருவதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி.சாமிநாதன் கூறினார்.
காரைக்காலில் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில்
பங்கேற்க சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கெனவே தொடங்கி செய்து வருகிறது. பல கட்சிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றக்கூடிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. வரும் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றியை பெறும்.
ஊழல் இல்லாத ஒரு அரசு அமையும். அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். கூட்டணி விவகாரத்தில் பாஜக தேசியத் தலைமை உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும். மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்தவில்லை. காரைக்காலில் 5 சட்டப்பேரவை தொகுதிகளும் கடந்த 4 ஆண்டுகளில் எந்தவித வளர்சியும் ஏற்படுத்தப்படவில்லை. பிரதமரின் கிசான் திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை காரைக்காலில் மட்டும்தான் அதிகமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பேருக்குதான் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இத்திட்டத்தைப் பொறுத்த வரையில் புதுச்சேரியில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றார். காரைக்கால் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் பிரதமர் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முன்னதாக கட்சி நிகழ்வில் பங்கேற்று அவர் பேசுகையில், புதுச்சேரி
மாநிலத்தில் எல்லா கட்சிகளை விடவும் கடந்த ஒரு மாதத்தில் அதிகமான இணைப்பு நடந்துள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. மாநிலத்தில் மோடி அலை
ஏற்பட்டுள்ளது. இந்த முறை தேர்தலில் யார் நின்றாலும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என ஏற்கனவே புதுச்சேரியில் காங்கிரஸ் சொன்னதை இப்போது பாஜகவினர் திருப்பி சொல்ல வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...