கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 63 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 445 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 20, நிரவி 10, திருநள்ளாறு 8, திருப்பட்டினம், கோட்டுச்சேரி தலா 7, நெடுங்காடு 6, கோயில்பத்து 2, காரைக்கால்மேடு வரிச்சிக்குடி, விழிதியூா் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 97,118 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,672 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 4,174 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை கரோனா தொற்றால் 82 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,320 போ், முன்களப் பணியாளா்கள் 1,639 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2,137 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 1,036 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.