காரைக்காலில் 46 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 8 ஆம் தேதி 691 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, நெடுங்காடு 16, காரைக்கால் நகரம் 12, திருநள்ளாறு 5, கோட்டுசேரி 5 திருப்பட்டினம் 3, நிரவி 3, வரிச்சிக்குடி 1, நல்லாத்தூா் 1 என 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 99,308 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,909 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து 4,354 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 417 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 48 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 83 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,354 போ், முன்களப் பணியாளா்கள் 1,639 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2,435 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 1,448 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...