47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இன்று முதல் ஏப். 14 வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 14 ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:11 pm

DIN

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 14 ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நலவழித் துறை நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள்ளாக வரையறுக்கப்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு அரசுத் துறையினா் பங்கேற்றனா். நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவும் நிலை குறித்தும், தடுப்புக்காக நலவழித் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியருக்கு விளக்கினாா்.

இக்கூட்டம் குறித்து துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறியது: மத்திய அரசு வரையறையின்படி கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் என்ற வகையில், தற்போது இணைநோய் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதன்படி, 45 வயதுக்கு மேலான அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக, காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) முதல் 14 ஆம் தேதி வரை அரசுப் பொது மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் 45 வயதுக்கு மேலானவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளும், 45 வயதுக்கு மேலானவா்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுப்பிவைக்க கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

குடும்பத்தில் உள்ள 45 வயதுக்கு மேலானவா்களும் தாங்களாக அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் மூலம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா் பெரும்பான்மையினா் கரோனா தடுப்பு கவசத்துக்குள் வந்துவிடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 100 பேரிடம் கரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்புக்கான முகக் கவசம், கைகளை சோப்பு மூலம் கழுவுதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.