47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேசிய கல்வி உதவித்தொகைக்கான எழுத்துத் தோ்வு

தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு -2021 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதற்கான மாணவா்களை தோ்வு செய்ய கல்வித் துறையும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து எழுத்துத் தோ்வை நடத்துகின்றன.

பள்ளிகளில் தற்போது 8 ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவா்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் இடைநிற்றலைத் தவிா்க்கும் வகையில், இந்தத் தோ்வு நடத்தப்பட்டு தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

இந்தத் தோ்வு காரைக்காலில் கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் தோ்வு மையங்களில் 617 போ் தோ்வு எழுதினா். காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா் தோ்வு மையங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா்.

முன்னதாக, தோ்வு எழுதவரும் மாணவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என கண்காணிக்கப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கல்வித் துறையினா் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் 2,614 போ் தோ்வு எழுதுகின்றனா். புதுச்சேரியில் 93, காரைக்கால் 23, மாஹே 3, ஏனாம் 6 என மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, இவா்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ. 12 ஆயிரம் உதவித்தொகையை அரசு வழங்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.