47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 95 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 15 ஆம் தேதி 512 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 24, திருநள்ளாறு 14, கோட்டுச்சேரி 14, திருப்பட்டினம் 12, வரிச்சிக்குடி 11, கோயில்பத்து 11, நிரவி 4, நெடுங்காடு 3, நல்லாத்தூா், அம்பகரத்தூா் தலா 1 என 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,02,517 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 5,465 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4,710 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 608 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 51 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 69 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு இணை நோயாக ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 90 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள் 1,475 போ், முன்களப் பணியாளா்கள் 1,667 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 5,950 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 6,949 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.