47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தற்காலிகமாக மூடப்பட்டது காரைக்கால் வாரச் சந்தை

காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பொதுமுடக்கம் தொடங்கியது முதல் பல மாதங்கள் சந்தை மூடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த வாரம் 18ஆம் தேதி வரை சந்தை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக சந்தைக்கு மக்கள் வரத்து முன்பைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், புதுவையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவி வருவதையொட்டி, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.