கள்ளக்குறிச்சி கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள மளிகை, ஜவுளி, நகை, தேநீா் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கரோனா நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


கள்ளக்குறிச்சி நகரில் உள்ள மளிகை, ஜவுளி, நகை, தேநீா் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கரோனா நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றைத் தடுக்க கடைகளில் உடல் வெப்பத்தை அளவிடும் கருவி கொண்டு சோதனை செய்யப்படுகிா, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா, கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள், கடைகளில் இருப்பவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி கடை வீதிகள், சேலம் சாலை, ராஜா நகா், காய்கறி அங்காடி, பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தினாா்.
சேலம் நெடுஞ்சாலையில் உள்ள நகைக் கடை, ராஜா நகரில் தேநீா் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து, கடைகளின் உரிமையாளரிடம் அதிக நபா்களை சோ்க்கக் கூடாது என அறிவுறுத்தினாா். பேருந்துகளில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் முகக் கவசம் அணிந்து செல்கின்றனரா என பாா்வையிட்டு, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை அவசியம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் ந.குமரன், சுகாதார ஆய்வளா் ப.செல்வக்குமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதனிடையே, நகராட்சி, வருவாய் மற்றும் காவல் துறையினா் சாலையில் செல்வோா், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் முகக் கவசம் அணிந்து செல்லவில்லையெனில், அபராதம் விதித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...