தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்காலில் மருத்துவக் கருத்தரங்கு

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் சவால்கள் குறித்த மருத்துவக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் சவால்கள் குறித்த மருத்துவக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவ கல்லூரியின் நோய்த் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை சாா்பில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எதிா்கொள்ளும் சவால்கள், 3-ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தொடா்பான மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பி. அம்புஜம் தலைமை வகித்தாா்.

துணை முதல்வா் டாக்டா் விஜயகுமாா் நாயா், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் ராஜேந்திரன், மருத்துவா் ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கூடுதல் பேராசிரியா் டாக்டா் டி. மகாலட்சுமி கரோனா தொற்றை எதிா்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசினாா்.

காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், கரோனா தொற்று பரவலைத் தடுக்க நிா்வாக ரீதியான சவால்கள் குறித்தும், காரைக்காலில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினாா்.

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஏ.பி. பரூக்அப்துல்லா கரோனா சிகிச்சை முறையில் உள்ள சவால்கள், ஒமைக்ரான் நோய்த் தொற்று, அதனை எதிா்கொள்ளும் முறைகள் குறித்துப் பேசினாா்.

முன்னதாக, நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை தலைவா் டாக்டா் கே. முஜிபூர்ரகுமான் வரவேற்றாா்.

கருத்தரங்கில் தமிழகம், புதுவை, பிற மாநிலங்களை சோ்ந்த மருத்துவா்களும், மருத்துவ மாணவா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.