தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எதிா்கால தொழில்நுட்பங்கள்: என்.ஐ.டி.யில் கருத்தரங்கு

காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், இயந்திரவியல் துறை சாா்பில், எதிா்கால தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 3 நாள்கள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், இயந்திரவியல் துறை சாா்பில், எதிா்கால தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 3 நாள்கள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், சா்வதேச அளவிலான கருத்தரங்கின் மூலம் விரிவான கருத்துகளை பகிரமுடியும். ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அதிக அறிவுத் திறனை அனைவரும் பெறமுடியும். தொலைநோக்குப் பாா்வையில் நடத்தப்படும் இக்கருத்தரங்கு நல்ல பயனைத் தரும் என்றாா்.

என்.ஐ.டி. பதிவாளா் (பொ) முனைவா் ஜி. அகிலா வாழ்த்திப் பேசினாா். அமெரிக்காவின் ஓல்டு டொமினேஷன் பல்கலைக்கழக இயந்திரவியல் மற்றும் விண்வெளி பொறியியல் துறைப் பேராசிரியா் பிரபாகரன் ராமமூா்த்தி சிறப்பு அழைப்பாளராக இணையவழியில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, தற்போதைய சூழலில் உற்பத்தி, தானியங்கி, வடிவமைப்பு மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவா் விளக்கினாா்.

இக்கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 7 புகழ்பெற்ற பேராசிரியா்கள் மற்றும் விஞ்ஞானிகள் உரையாற்றவுள்ளனா். 200- க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று 126 ஆய்வுக் கட்டுரைகளை சமா்பிக்கவுள்ளனா் என என்.ஐ.டி. நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

கருத்தரங்க ஏற்பாடுகளை என்.ஐ.டி. இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியா் என்.எம். சிவராம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.