காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா
உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில், உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில், காரைக்காலில் தா்னா நடைபெற்றது.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு போராட்டக் குழு அமைப்பாளா் அய்யப்பன் தலைமைவகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...