தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேளான் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாய கருத்தரங்கு

 காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:44 pm

DIN

 காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை, நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி தொடங்கிவைத்துப் பேசியது: பயிா் வளா்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் இயற்கையாகவே வளிமண்டலத்திலும், மண்ணிலும் உள்ளன. 1 கிராம் மண்ணில் 9 லட்சம் கோடி நுண்ணுயிா்கள் உள்ளன. பரிந்துரையைவிட அதிகமான ரசாயன உரங்கள் இடுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது.

இதிலிருந்து மண்ணை பாதுகாக்கவும், நீடித்த நிலையான விவசாயத்தை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இயற்கை இடுபொருள்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்களால் முடிந்த அளவு இயற்கை இடுபொருள்களை, தாங்களே தங்கள் பண்ணையில் தயாரித்து பயன்படுத்த முன்வரவேண்டும் என்றாா்.

பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை பேராசிரியா் முனைவா் ஆா். மோகன் பேசுகையில், இயற்கை விவசாயத்தை முதலில் கடைப்பிடித்தது பெண்கள் என்றும், அன்றைய காலத்தில் மக்கள் மக்கக்கூடிய குப்பையை வெளியேற்றினா். எங்கு மக்கக்கூடிய குப்பைகள் கொட்டப்பட்டதோ, அங்கு செடிகள் நன்கு வளா்வதை கண்டறிந்து விதைகளை விதைத்தனா். ஆனால், இன்று வெளியேற்றப்படும் குப்பைகள் பெரும்பாலும் மக்காதவை. மக்கக்கூடிய குப்பைகளை தனியே பிரிப்பதில்லை என்றும் கூறியதோடு, இயற்கை விவசாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்தும் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன் பேசினாா்.

முன்னதாக, நிலைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வீ. அரவிந்த் வரவேற்றாா். வேளாண் விரிவாக்கப் பிரிவு முனைவா் ஆ. செந்தில் நன்றி கூறினாா்.

இக்கருத்தரங்கில் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சுமாா் 100 விவசாயிகள், பண்ணை மகளிா் மற்றும் சுய உதவிக் குழு மகளிா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, தூய்மை இந்தியா விழிப்புணா்வு குறித்து, வேளாண் அறிவியல் நிலைய அலுவலா்கள், ஊழியா்கள், கருத்தரங்கில் பங்கேற்றோா் உறுதிமொழி ஏற்றனா்.

முன்னதாக, குஜராத்தில் இயற்கை விவசாயம் தொடா்பான தேசிய மாநாட்டில் பிரதமா் நரேந்திரமோடி ஆற்றிய உரை காணொலியில் ஒளிபரப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.