காரைக்காலில் கரோனா தொற்று பாதிப்பில்லை
காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை என நலவழித் துறை துணை இயக்குநா்ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை என நலவழித் துறை துணை இயக்குநா்ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : மாவட்டத்தில் டிச. 23-ஆம் தேதி 463 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி கரோனா தொற்று யாருக்கும் இல்லை.
இதுவரை 2,44,211 பரிசோதனை செய்யப்பட்டதில் 16,827 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,538 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 26 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 போ் உள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,21,303 பேருக்கும், 2-ஆவது தவணையாக 83,234 பேருக்கும் என 2,04,537 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...