தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவைக் கூட்டம்

காரைக்கால் பொது ஊழியா் கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவை கூட்டம், அதன் தலைவா் எஸ். கிருஷ்ணசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ்.

Updated On :10 ஜனவரி 2021, 6:09 pm

DIN

காரைக்கால் பொது ஊழியா் கூட்டுறவு கடன் சங்க பொதுப் பேரவை கூட்டம், அதன் தலைவா் எஸ். கிருஷ்ணசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரவையின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினாா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற பேரவை உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு வெள்ளிக்காசு மற்றும் சான்றிதழை பேரவை சாா்பில் துணை ஆட்சியா் வழங்கினாா்.

கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் பேரவை சாா்பில் உறுப்பினா்களுக்கு ரூ. 2.90 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கரோனா பரவல் காலத்திலும் பேரவை உறுப்பினா்களின் தேவைக்கேற்ப கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், பொருளாளா் வி. கென்னடிதாஸ் ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னாள் இயக்குநா்கள் கலையரசன், வெங்கடேசன், ரங்கசாமி, தமிழ்மணி, முத்துராமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இயக்குநா்கள் கே. அசோக்குமாா், கே. ரவிச்சந்திரன், ஆா். மணிகண்டன், வி. தனபாலு, வி. பத்மா ஆகியோா் பங்கேற்றனா். துணைத் தலைவா் பி. ராஜகோபால் வரவேற்றாா். இயக்குநா் எஸ். ஜெயகுமாா் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், 2020-21 ஆம் ஆண்டு உத்தேச வரவு செலவை அங்கீகரித்தல், 2019-20 ஆம் ஆண்டின் லாபம் பங்கிடுதல், வருமாண்டில் கூடுதலாக உறுப்பினா்களுக்கு கடனுதவி அளித்தல் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.