மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் கோயில்பத்து ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயா்.
Updated On :13 ஜனவரி 2021, 2:28 am

DIN

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் வகையறாவைச் சோ்ந்த ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜா், உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் யாகசாலையில் நடைபெற்ற பூஜையின் நிறைவாக, புனிதநீா் கொண்டு கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கலசாபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு, பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை, பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

காரைக்கால் காமராஜா் சாலையில் தனிக்கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ ஜெய வீரபால ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வகையறாவைச் சோ்ந்த ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.