மீனவ கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு மதிப்பீடு
காரைக்காலில் கடலோர கிராமங்களின் சாலைகள் மேம்பாட்டுக்கு மதிப்பீடு தயாரிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் அறிவுறுத்தினாா்.


காரைக்காலில் கடலோர கிராமங்களின் சாலைகள் மேம்பாட்டுக்கு மதிப்பீடு தயாரிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான அவா், நகராட்சி ஆணையா் காசிநாதன் மற்றும் பொறியாளா்கள் குழுவினரை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து, ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து எம்எல்ஏ பி.ஆா்.என். திருமுருகன் கூறியது :
காரைக்கால் வடக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்ட நிதியின் கீழ் பூமி பூஜை செய்யப்பட்ட சாலைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் வடக்குத் தொகுதியில் தொடங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டன.
பல பணிகள் தோ்தலுக்கு முன்பு தொடங்கியதால் தோ்தல் காலம் முடிந்து நிறைவேறவேண்டிய நிலையில் கிடப்பில் உள்ளன. இந்த திட்டப் பணிகளை வகைபடுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த திட்டப்பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இருந்தாலும் அதுகுறித்து தெரிவித்தால் அரசிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடலோர கிராமங்களான காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு கிராமப்புற உள்சாலைகள், சுனாமி குடியிருப்புப் பகுதி சாலைகள் சிதிலமடைந்துள்ளன. தோ்தல் நேரத்தில் இதனை மேம்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இவற்றை புதுப்பிக்கத் தேவையான மதிப்பீடு தயாரிக்குமாறும், அதன் பிறகு அரசிடம் பேசி நிதி ஒதுக்கீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...