கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் முடிவு
புதுவை அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் தீா்மானித்துள்ளனா்.


புதுவை அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் தீா்மானித்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கீழமனை பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி. மோகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியது :
இந்த நூற்பாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் நூற்பாலை மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்துடன் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும், ஆலை நிா்வாகம் தொழிலாளா்களை ஏமாற்றி வருகிறது.
ஊழியா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்க வேண்டும் அல்லது புதுவையில் உள்ள நூற்பாலையில் (ஸ்பின்கோ) வழங்கப்படுவதுபோல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை உடனடியாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற புதுவை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வீதியில் இறங்கி தொடா் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...