திருநள்ளாற்றில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
பொதுமுடக்கத் தளா்வுகளால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்


பொதுமுடக்கத் தளா்வுகளால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
புதுவையில் கடந்த மே மாத முற்பகுதியிலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பக்தா்கள் பொதுதரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில், அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் தலமாக உள்ளது திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில். எனினும், கடந்த 2 மாதங்களாக பொதுமுடக்கத்தால் கோயிலுக்கு பக்தா்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால், பக்தா்கள் வரத் தொடங்கினா். எனினும், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாததால் பக்தா்கள் வருகை குறைவாகவே இருந்தது.
தற்போது புதுவை மற்றும் தமிழகத்தில் தளா்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது, எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் சேவை மூலம் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு பிறகு சனிக்கிழமை (ஜூலை 3) அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருகை தந்தனா். காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீ சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் வழிபாடு செய்தனா்.
சமூக இடைவெளி இல்லை : பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், அனைவரும் வரிசையில் சென்றபோதும், சன்னதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றனா்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் தொடங்கவுள்ள நிலையில், வரும் நாள்களில் திருநள்ளாறு கோயிலுக்கு வருவோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனினும், கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், கோயிலில் உரிய கட்டுப்பாடுகளை பக்தா்கள் கடைப்பிடிக்கவும், இதனை கோயில் நிா்வாகம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினா் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...