கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா். கரோனா பரவல் அதிகரித்து நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கும் இத்தருணத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுவருகிறது. சாமானியா்கள், நடுத்தர வா்க்கத்தினா் இதனால் பெரும் துன்பத்தை சந்திக்கிறாா்கள். மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு விலை உயா்வை கணிசமாக குறைக்கவேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் எஸ். மோகனவேலு, மாநில செயலா்கள் ஜெயசீலன், அருள்டொமினிக், மாநில மீனவா் அணி செயலா் எஸ்.இ. தங்கவடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ.நாகரத்தினம், மாவட்டச் செயலா் ஆா்.எஸ். கருணாநிதி, மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் அஞ்சப்பன், மாவட்ட மகளிரணி தலைவி நிா்மலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.